இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹேப்பி ராஜ்.” இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். இவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் அப்பாஸ் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். இது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆடினே இருப்பேன்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த பாடல் மிகவும் உற்சாகமான பாடலாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் வருகிற மார்ச் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
