செல்வராகவன் நடிப்பில் உருவான ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீஸர் வெளியாகி வைரல்!

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இந்த திரைப்படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக ‘டிரிப்’, ‘தூக்குத்துரை’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

இயக்குநர் செல்வராகவன் தற்போது  பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் செல்வராகவனுடன் குஷி ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயற்கையும் அமைதியும் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நிகழும் பெரிய சோகம் அந்த கிராமத்தின் ஒற்றுமையை சிதைக்கிறது. அந்த துயரத்தை எதிர்கொண்டு, தனது கிராமத்தை காப்பாற்ற மக்கள் மனவலிமையுடன் போராடும் நாயகன் எடுக்கும் தீர்மானம், அவனை அந்த கிராம மக்களிடையே தெய்வமாக உயர்த்துகிறது. இந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால் படத்திற்கு ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். வெளியான இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading