சமுத்திரக்கனி- கௌதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர்களாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களாக உயர்ந்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக இவர்கள் இருவரும் ‘ரத்னம்’ திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனி தற்போது பிற மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஒரு பயணத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. இதில் ‘சில பயணங்கள் உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும்; மற்றவை உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதால், மறக்க முடியாத பயண அனுபவத்தை இந்த திரைப்படம் விவரிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த கருத்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading