கலையரசன் நடித்துள்ள ‘கொலைச்சேவல்’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

ஆர்.பி. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். பி. பாலா தயாரிக்கும் திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்குகிறார். கதையின் மையக் கதாபாத்திரங்களில் கலையரசன் மற்றும் தீபா பாலு நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொண்டுள்ளார். திரைப்படத்திற்கான இசையை சாந்தன் அமைத்துள்ளார்.

‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது, ‘கொலைச்சேவல்’ திரைப்படம் வருகிற 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெளியீட்டு அறிவிப்புடன் வெளியிடப்பட்ட புதிய போஸ்டரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading