நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து, தனுஷின் 56வது திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், தனுஷின் மற்றொரு புதிய படத்தை ‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கோவிலில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ‘கெளம்பியாச்சு’ என்ற குறிப்புடன் #D56 என்று பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதிவு மூலம் தனுஷின் 56வது திரைப்படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று கூறப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து இயக்கவுள்ள படம் இதனைத்தொடர்ந்து உருவாகும் என சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
