பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘Made in Korea’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘Made in Korea’. இந்தப் படத்தை இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், சிறுவயது முதலே கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பினால் தென் கொரியா செல்லும் கதையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர் எதிர்கொள்ளும் புதிய சூழல்கள், கலாச்சார வேறுபாடுகள், சவால்கள் மற்றும் உருவாகும் நட்புகள் ஆகியவற்றை உணர்ச்சி பூர்வமாகச் சொல்லும் வகையில் படம் அமைந்துள்ளது. இது ஒரு மனதை நெகிழச் செய்யும் ஃபீல்குட் வகை திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்நிலையில், தற்போது வெளியான டிரெய்லரும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading