‘மண்டேலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனித்துவமான கவனத்தைப் பெற்றவர் மடோன் அஸ்வின். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சுனில், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது குரலை ‘அசரீரி’ வடிவில் வழங்கியது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. இந்த திரைப்படம் மடோன் அஸ்வினை ஒரு தனித்துவமான கதையம்சங்களை தேர்வு செய்யும் இயக்குநராக்கியது.
இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மாவீரன்-2’க்கான கதையை மடோன் அஸ்வின் எழுதத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
