நடிகர் யஷ்-ன் ‘டாக்ஸிக்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், பான் இந்திய அளவில் வெளியாகிறது.

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டீசர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இந்தப் படத்தில் யஷ் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்களிடம் ஆச்சரியமும் உற்சாகமும் அதிகரித்துள்ளது. ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வித்தியாசமான கோணங்களில் அவர் தோன்றுவார் என கூறப்படுகிறது.

முதலில் இந்த திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழ்நிலை காரணமாக வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு தரப்பினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு  அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading