‘ரோஸ்லின்’ இணையத் தொடருக்காக உடல் எடையைக் குறைத்த நடிகை மீனா!

நடிகை மீனா கடந்த சில ஆண்டுகளாகத் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்துவருகிறார். அந்த வரிசையில், மலையாளத்தில் இரண்டு பகுதிகளாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் மூன்றாம் பகுதியில் தற்போது நடித்துப் பணிகளை நிறைவு செய்துள்ளார். இந்த படப்பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஒருபுறம் ‘ரோஸ்லின்’ இணையத் தொடரின் படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்தார் மீனா. இந்த இணையத் தொடர் நேற்று முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீனாவுடன் நடிகர் வினீத் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இந்த இணையத் தொடரை சுரேஷ் நந்தகுமார் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ரோஸ்லின்’ தொடரின் கதை வடிவமைப்பில், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் கதாபாத்திரத்தில் மீனா நடித்தால் கதைக்கு சரியாக இருக்கும் என இயக்குநர் எண்ணியுள்ளார்.

இக்கதையை கேட்ட மீனாவுக்கு கதை மிகவும் பிடித்ததால் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தை உணர்ச்சிமிக்க வகையில் வெளிப்படுத்துவதற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து நடித்தார் என இயக்குநர் உமேஷ் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading