வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள தங்களது திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Add a Comment
