இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கி உள்ள இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, சுமார் ரூ.63 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், கன்னட திரைப்பட வரலாற்றில் தமிழக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக ‘டாக்ஸிக்’ புதிய சாதனை படைத்துள்ளது. யாஷின் மாஸ் இமேஜ் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே கன்னட படங்களுக்கு உள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு இந்த பெரிய தொகைக்கு உரிமைகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படம் மார்ச் 19-தேதி வெளியாக உள்ளது.
Add a Comment
