தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் அல்லு அரவிந்த். அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வெங்கடேஷ் அல்லு திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இரண்டாவது அல்லு அர்ஜுன், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். மூன்றாவது மகன் அல்லு சிரிஷ் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அல்லு சிரிஷ். “மார்ச் 6ம் தேதி எனக்கும், நயனிகாவுக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்ள திருமணம் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி அல்லு ஸ்டுடியோவில் தெலுங்கு திரைப்படத் துறையினருடன் எங்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை பெருமையுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
