டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும் ஜிம்பாப்வே அணியும் நேற்று முன்தினம் (பிப்.26) சென்னையிலுள்ள சேப்பாக்கம் திடலில் மோதின. இதில், இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டிக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. தனது இசையில் உருவான பல பாடல்களை அனிருத் பாடினார். அந்த வரிசையில் அவர் பாடிய ’ராவண மவன்டா’ எனும் பாடல் சேப்பாக்கம் மைதானத்தை அதிர வைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
Add a Comment
