ஓடிடியில் வரவேற்பை பெறும் சேரனின் ‘ஆட்டோகிராப்’

சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்த கிளாஸிக் சூப்பர் ஹிட் படம் ‘ஆட்டோகிராப்’. 2004ல் வெளியான இந்த படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் மாதிரியான பல நினைவுகள் இருக்கும். இந்த படம் அப்படிப்பட்ட ஒரு கதையில் தான் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.கடந்த ஆண்டில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி ரீ ரிலீஸ் செய்தனர். ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆட்டோகிராப் படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். அதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி சேரன் வெளியிட்ட பதிவில், ‛‛அமேசானில் திரையிட தொடங்கிய குறுகிய காலத்தில் இதுவரை இந்தியாவில் மட்டும் 27 லட்சம் நிமிடங்கள் மக்களின் பார்வையில் ஆட்டோகிராப் பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி மக்களே” என குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading