ஹனுமான் பிறந்த இடமாக கருதப்படும் ஹம்பியில் ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

கடந்த 2024ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமாக புராணக் கதை அம்சத்துடன் வெளியான ‘ஹனுமன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் பெரிய சாதனையை படைத்தது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இதில் கதாநாயகனாக நடிகர் தேஜா சஜ்ஜா நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘ஜெய் ஹனுமான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த புதிய பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றுள்ளது. ஹனுமான் பிறந்த இடமாக கருதப்படும் ஹம்பியில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என்ற இடத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading