பாடலாசிரியர், பாடகராக, நடிகராக இருந்து இயக்குநர் ஆனவர் அருண்ராஜா காமராஜ். ‘கனா’ படத்தின் வெற்றி மூலம் இயக்குனராக பெரிய ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டவர் ஆனால் அவர் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற ரீமேக் படத்தை இயக்கினார். ‘லேபிள்’ என்ற வெப் தொடரை இயக்கினார். தற்போது ‘வஞ்சம் தீர் என்ற இசை ஆல்பத்தில் பாடி, நடித்துள்ளார். புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ஆல்பத்தை புஷ்பநாதன் இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
Add a Comment
