நடிகை ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உசிலம்பட்டி பகுதியில் உள்ள காடுபட்டி என்ற கிராமத்தில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த கதையில் மூதாட்டியாக பவுன் தாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘தாய் கிழவி’படத்தின் முதல் பாடலான ‘தாய்கிழவி வாரா’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் ஆகியது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘மாட்டிக்கிட்டான் மைனர்குஞ்சு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அருண்ராஜகாமராஜ் எழுதியுள்ளதுடன், பாடகி சுப்லக்ஷினி பாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading