‘லோகா – 2’ படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!

மலையாள திரைப்பட உலகில் துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1: சந்திரா ஆகும். இந்த திரைப்படத்தில் ‘சூப்பர் உமன்’ என்ற வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கல்யாணி, தனது திறமையான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றார்.

250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொடர்ச்சிப் பகுதியில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்த கல்யாணி பிரியதர்ஷன் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டியில் கல்யாணி பிரியதர்ஷன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “லோகா – 2 திரைப்படத்திற்கான கதை தற்போது எழுதப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். இந்த இரண்டாம் பாகத்திலும் நான் இடம்பெறுகிறேன்” என்று உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading