தென்னிந்திய திரைப்படங்களிலும் மற்றும் தி பேமிலி மேன் உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் சிறப்பாக நடித்து நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகை பிரியாமணி தற்போது சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தோ-அமெரிக்க தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியாமணியுடன் மோஹித் ரெய்னா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஹர்ஷ் மகாதேஷ்வர் இயக்குகிறார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ரெட் பைசன் புரொடக்சன்ஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த அசூர் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த திரைப்படம், இந்திய மற்றும் அமெரிக்க கலாசாரங்களை இணைக்கும் குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. சர்வதேச அரங்கில் புதிய உயரத்தை எட்டவுள்ள பிரியாமணிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
