‘சர்வம் மாயா’ படத்தின் இளம் நடிகை ரியா ஷிபுவை பாராட்டிய சூர்யா – ஜோதிகா!

நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் நூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ‘டெலுலு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அவரது நடிப்பும் கதாபாத்திரத் தேர்வும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் வெற்றியை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர் சூர்யா – ஜோதிகா தம்பதி. இந்த அன்பான வாழ்த்து திரைப்படக் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருபது வயதான ரியா ஷிபு, எச்.ஆர். பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவராக விளங்கும் ரியா ஷிபு, தன்னுடைய ட்ரெண்ட் காணொளி மற்றும் புகைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் பகிரும் பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading