கவனத்தை ஈர்க்கும் இயக்குனர் ஏஎல்.விஜய்யின் ‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டீஸர்!

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான படைப்புகளால் கவனம் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஏ.எல். விஜய். நடிகர் அஜித் நடித்த ‘கிரீடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘பொய் சொல்ல போறோம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தேவி’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பாராட்டுகளை பெற்றார். அவரது ஆரம்பகால படைப்புகள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன.

ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல், அவரது திரை வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘மிஷன் : சாப்டர் ஒன்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் குறித்தும் கலவையான விமர்சனங்களே வெளிவந்தன.

தற்போது ‘காதல் ரீசெட் ரிபீட்’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்த திரைப்படத்தில் மதும்கேஷ் மற்றும் ஜியோ சங்கர் ஆகிய புதுமுகங்கள் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர். மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். வருகிற மார்ச் 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading