சூர்யாவுடன் இணைகிறாரா அஸ்வத் மாரிமுத்து? உலாவும் புது தகவல்!

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. அடுத்ததாக சிம்பு நடிப்பில் ‘காட் ஆப் லவ்’ என்ற திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ‘டிராகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினியிடம் ஒரு கதையை அஸ்வத் மாரிமுத்து கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தக் கதையில் ரஜினி நடிக்க விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் அதே கதையை நடிகர் சூர்யாவிடம் அவர் விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

அந்த திரைப்படம் காவல் துறை பின்னணியில் உருவாகும் கதையைக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading