என் தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விகுறியாகிறது, அதனால் தான் பவுன்சர்கள் எப்போதும் உடன் இருக்கிறார்கள் – பிரியங்கா சோப்ரா OPEN TALK!

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாலும் பாதுகாப்பு பணியாளர்கள் அதாவது பவுன்சர்கள் சூழ்ந்தே வருவது கவனிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, “அன்புடன் என்னை அணுகும் ரசிகர்கள் மற்றும் என் அனுமதியுடன் புகைப்படம் எடுப்பவர்கள் குறித்து எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், என் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது எனக்கு விருப்பமில்லை. ஒருமுறை என் மகளுடன் ஒரு பூங்காவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குள் எங்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி விட்டது. இது என் தனிப்பட்ட பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. அதனால்தான் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading