பெத்தி திரைப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “சிக்கிரி சிக்கிரி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பாடலில் உள்ள ஹூக் ஸ்டெப்பின் பின்னணி குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்தார்.
அவரின் கூற்றுப்படி, ‘BAT ஸ்டெப்” என அழைக்கப்படும் அந்த அசைவைக் உருவாக்கியது ராம் சரண்தான். மட்டையைப் பிடித்து அவர் செய்த வித்தியாசமான அசைவுகள் மிகவும் புதுமையாக இருந்ததால், அதை அவரே வெளிப்படுத்தி சிறப்பாக ஆடினார். ஒவ்வொரு பாடலிலும் ராம் சரண் தனது தனிப்பட்ட உழைப்பையும் சேர்ப்பார். நடிகர்களே இப்படியாக புதிய ஸ்டெப்புகளை உருவாக்கி ஆர்வத்துடன் ஈடுபடும் போது, என்னைப் போன்ற நடன அமைப்பாளர்களுக்கு அவர்களுடன் பணியாற்றும் உற்சாகம் அதிகரிக்கிறது என்று தெரிவித்தார்.
