மலையாள பின்னணி பாடகி சித்தாரா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ‛ஏலேலம் கிளி’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். ஒரு இளம்பெண் தனது மறைந்த அன்னையின் நண்பரை தேடி பயணிப்பது போன்று இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இவர் பிரமிக்க வைக்கும் அழகுடன் வெள்ளை உடை தேவதையாக காட்சியளிக்கிறார். இது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
Add a Comment
