ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு வாபஸ்!

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க மேலும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நேற்று வெளியான நிலையில் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.  ஜன நாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற விரும்பியதால் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து படக்குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விரைவில் தேவையான மாறுதல்களை செய்து ரிவைசிங் கமிட்டிக்கு ஜன நாயகன் திரைப்படம் அனுப்பப்பட்டு விரைவில் சென்சார் சான்றிதழ் பெற்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ‌

m

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading