தெலுங்கு இயக்குனரான ஹரிஷ்சங்கர் நேற்று சென்னையில் இளையராஜா ஸ்டுடியோ முன்பு நின்று செல்பி ஒன்றை எடுத்துப் பதிவிட்டு, “கடவுளின் தரிசனத்தைப் பெற்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் தற்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தை இயக்கி வருகிறார். மார்ச் மாதம் 26ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்தை சந்திப்பதற்கு முன்பாக இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
Add a Comment
