இயக்குனர் ராஜமவுலி தற்போது ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அடுத்த வருடம் 2027, ஏப்ரல் 7ம் தேதி வெளியிட உள்ளார்கள். இந்நிலையில் தனது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால் ஹாலிவுட் உரிமை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதை சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறேன் என ராஜமவுலி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதே அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 100 கோடிக்கும் அதிகமாகக் கேட்கிறார்களாம். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்புதான் அது பற்றிய வியாபாரத்தை பேசப் போகிறார்களாம். எப்படியும் 150 கோடிக்கு அதிகமாக விலை போகும் என கூறப்படுகிறது.
Add a Comment
