தமிழ்த் திரையுலகில் வாழ்நாள் முழுவதும் சிறந்து விளங்கிய கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 2025 ஆம் ஆண்டுக்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Add a Comment
