ரூ.6 கோடி சம்பளத்தை ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு வழங்கிய விவேக் ஓபராய்!

Bollywood actor Vivek Oberoi attends the trailer launch of his upcoming Indian Hindi-language action drama Amazon original series ‘Indian Police Force’ in Mumbai on January 5, 2024. (Photo by Sujit JAISWAL / AFP)

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் விபீஷணன் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படத்திற்காக அவருக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தொகையைத் தனது சம்பளமாகப் பெற்றுக்கொள்ள விரும்பாத விவேக் ஓபராய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக அதைப் பயன்படுத்துமாறு படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ராவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்..தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மேற்கொண்ட இந்த மனிதநேயச் செயல் திரையுலகினரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply