எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தூய்மைப்பணியாளர் பத்மாவிற்கு பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து அவரை கவுரவப்படுத்தினார்.இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, உலக அழகி என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
