நடிகர் மாதவன் நடித்துள்ள ‘Legacy’ என்ற வெப்சீரிஸின் டீசரை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை நிமிஷா சஜயன், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸுக்கு இசை அமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
மாதவன் இதுவரை காணப்படாத விதமான கெட்டப்பில் தோன்றும் இந்த டீசர், வெளியான உடனே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை முழுமையாக பார்க்கும்போது, இது அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர்.
‘அம்மு’ என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய சாருகேஷ் சேகர் இந்த வெப்சீரிஸை எழுதி இயக்கியுள்ளார். ‘லெஜஸி’ தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ப்ளிக்ஸில் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
