‘மண்டாடி’ படத்திற்காக பயிற்சி எடுத்து வரும் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி !

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாக உயர்ந்து தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், அவர் தற்போது இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், நடிகை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் சுஹால், நடிகர் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டாடி’ திரைப்படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகும் பிரம்மாண்டமான படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம், ரூ.75 கோடி செலவில் உருவாகி வருகிறது. நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகும் முதல் பெரிய பட்ஜெட் பிரம்மாண்ட திரைப்படமாக இது இருக்கும் என தயாரிப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், இப்படம் வரும் கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், இப்படத்திற்காக கடலில் பயிற்சி எடுத்து வரும் வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்” என்ற வார்த்தைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading