ஜெர்மனியில் நடைபெறும் 76 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் (Forum) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக இயக்குநர் இரா. கௌதம் இயக்கிய “சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்” (Members of the problematic Family – மெம்பர்ஸ் ஆஃப் தி ப்ராபளமேட்டிக் பேமிலி) என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறை. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி ஆகிய தமிழ்ப் படங்களுக்கு அடுத்து இந்தப் பிரிவில் தேர்வாகும் நான்காவது திரைப்படம் இது.
Add a Comment
