சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘MY LORD’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமார் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. 7 கோடியில் தயாரான இப்படம் 90 கோடி வசூலித்தது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதையடுத்து ‘ஜோக்கர், குக்கூ’ என சில படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் ‘மை லார்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார் சசிகுமார்.

இப்படத்தில் அவருடன் சைத்ரா ஜே. அச்சர், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ‘மை லார்ட்’ படம் வருகிற பிப்ரவரி 13ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் சமூக பிரச்னைகளை பேசும் குடும்ப கதையில் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading