காதலர் தினத்தன்று வெளியாகிறதா பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘எல்.ஐ.கே’ (Love Insurance Company) ஆகும். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுடன், அனிரூத் இசையமைத்துள்ளார். 

இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு காரணங்களால் வெளியீட்டு தேதி தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றும் படம் திரைக்கு வரவில்லை.

தற்போது, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13-ம் தேதி இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு தணிக்கை குழுவிற்கு படத்தை அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்தவுடன், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading