கொச்சி ‘சீன்’ பட நிகழ்ச்சியில் பங்கேற்காத நடிகர் சூர்யா… என்ன காரணம்?

சீன் திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் 2026 நவம்பர் 6 அன்று தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வரவிருக்கும் புதிய திரைப்படம். சூர்யாவின் 47-வது படமான இதில் அவர் ‘இன்பராஜ்’ என்ற கலகலப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையே, கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறவிருந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவை நேரில் காண்பதற்காகப் பல்வேறு இடங்களில் இருந்து கொச்சிக்குப் புறப்பட்ட ரசிகர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர். அவரைப் பார்ப்பதற்காகவே நீண்ட தூரம் பயணம் செய்துவரும் நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்காத செய்தி வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply