சசிகுமார் யாத்திசை இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ‘டெத் ரயில்வே’!

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பர்மாவில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு சசிகுமார் நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது. ‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜப்பான் படைகள் இந்தியாவிற்குள் நுழையும் நோக்கில் பர்மா மீது படையெடுத்தபோது நடந்த நிகழ்வுகளைப் படத்தின் கதைக்களமாகக் கொண்டுள்ளனர். இதில் சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்.

ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, ‘டெத் ரயில்வே’ என்ற தலைப்பையும் அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போர் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள டீசர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply