தனது இளமையின் ரகசியத்தை பகிர்ந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்புடன் ‘சின்ன குஷ்பு’ என அழைக்கப்பட்டவர். ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஓகே ஓகே’, ‘எங்கேயும் காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த காலகட்டத்தில், அவர் சற்றே கூடுதல் உடல் எடையுடன் தோன்றினார்.

அந்த நேரத்திலும் கூட, ஹன்சிகாவின் தோற்றத்தை ரசிகர்கள் பெரிதும் ரசித்தே வந்தனர். அதன் பின்னர், சில ஆண்டுகளுக்குள் அவர் தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பல கிலோ எடையை குறைத்தபோதிலும், எந்தவிதமான கடுமையான டயட்டையும் பின்பற்றவில்லை என்று ஹன்சிகா தெரிவித்தது பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது 34 வயதிலும் 16 வயது பெண் போன்று இளமைத் தோற்றத்துடன் இருப்பதற்கான ரகசியத்தை ஹன்சிகா வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் டயட் எதையும் பின்பற்றவில்லை. ‘பை லேட்ஸ்’ (Pilates) என்ற ஒரு வகையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த பயிற்சி முக்கியமாக வயிறு, இடுப்பு மற்றும் முதுகுத் தசைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படாமல், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. இது எனக்கு ஒரு நிலையான பயிற்சியாக மாறிவிட்டது. முழு உடலையும் இயக்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அதே நேரத்தில், யோகா செய்வதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது” என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading