மமிதாவுக்கும் எனக்கும் எந்த போட்டியும் கிடையாது… நடிகை அன்ஸ்வரா OPEN TALK!

மலையாள திரையுலகில் ‘சூப்பர் சரண்யா’, ‘குருவாயூர் அம்பல நடையில்’, ‘சாம்பியன்’, ‘நேரு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றவர் அனஸ்வரா ராஜன். இவர் தற்போது ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

இதற்கு முன்பு தமிழில் அவர் நடித்த ‘ராங்கி’, ‘தக்ஸ்’ போன்ற படங்கள் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துவிட்டு, மீண்டும் தமிழில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் ஓரளவு தமிழ் பேசுவதற்காகவும் பயிற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ‘வித் லவ்’ படத்துக்கு அடுத்ததாக, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். உங்களுக்கும் நடிகை மமிதா பைஜூவுக்கும் போட்டியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, உண்மையில் எனக்கும் அவருக்கும் எந்த போட்டியும் கிடையாது, அவர் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் என்று அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading