சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அஷ்வின் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படத்தில் நடிகை பவானி ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய பவானி ஸ்ரீ, “தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் என்னிடம் காட்டி வரும் அன்பு என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த அன்பே கலைஞர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளிக்கும் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் வெற்றி எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்பே என் உண்மையான தேடல். அந்த அன்பை நோக்கித்தான் என் பயணம் தொடரும். ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருக்க, என் பொறுப்பை நான் எப்போதும் நேர்மையாக நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
