ரேஸிங் களத்தில் அஜித் குமார்-ஐ சந்தித்த நடிகர் மாதவன் !

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, சமீப காலமாக பல சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். நடிப்பை விடவும் தனது தனிப்பட்ட விருப்பமான மோட்டார் ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்தி, உலக அளவிலான போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருவது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அஜித் குமார் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அபுதாபியில் நடைபெற்ற ரேஸிங் போட்டி களத்தில், திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஜித்தை சந்தித்து உற்சாகம் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், சமீபத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் நேரில் சென்று அஜித் குமாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading