மம்முட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் ‘பாதயாத்ரா’

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘பாதயாத்ரா’ (பாதயாத்திரை) என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கலைநயத்துடன் கூடிய திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன். அவர் இயக்கிய ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ போன்ற திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருதுகள் உட்பட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன், கடைசியாக 2016 ஆம் ஆண்டு ‘பின்னேயும்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டியுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மம்மூட்டியின் ‘களம்காவல்’ திரைப்படம் தற்போது ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading