சமீப காலமாக சமூக ஊடகங்களில் திரைப்பட நட்சத்திரங்களை குறித்து பொய்யான தகவல்கள் மற்றும் தவறான செய்திகளின் பரவல் அதிகரித்து வருகிறது. இத்தகைய செய்திகள் மிகக் குறுகிய நேரத்தில் வைரலாகி விடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்களும் கூட உரிய உண்மைச் சரிபார்ப்பு இன்றி இவ்வாறான தகவல்களை வெளியிடுவதால், குழப்பமும் சர்ச்சைகளும் உருவாகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் நடிகை தபு கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. தனது வாழ்க்கையில் ஒரு குறிபிட்ட விஷயத்திற்தாக தவிர வேறு எந்த விஷயத்திற்கும் ஆண் தேவையில்லை என்று தபு கூறியதாக சமூக ஊடக தளங்களில் செய்திகள் வெளியாகின. சிலர் அதை துணிச்சலான கருத்தாக பாராட்டினாலும், பலர் அதற்கு கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு தபுவின் குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடிகை தபு இதுபோன்ற கருத்தை ஒருபோதும் கூறியதில்லை என்றும், பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க போலியானது என்றும் அவரது குழு தெளிவுபடுத்தியுள்ளது. 54 வயதான தபு, திருமணம் செய்யாமல் தனிமையாக வாழ்ந்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறைகளில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வரும் அவர், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள “ஸ்லம்டாக்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
