விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மௌன திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’. கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில், 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஏதோ ஏதோ’ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் பா.விஜய் எழுத்துகளில் உருவான இந்தப் பாடல், மென்மையான மெலடி பாடலாக அமைந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது வித்தியாசமான மௌன திரைப்படமாக உருவாகியுள்ளதால், ‘காந்தி டாக்ஸ்’ படத்திற்கு பின்னணி இசை மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில், ஏ.ஆர். ரகுமான் அமைத்துள்ள இசை, படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
