மம்முட்டி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் களம் காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டி வில்லன் ஆகவும், வில்லன் நடிகர் விநாயகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 22 பெண்கள் கதை நாயகிகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவர்களில் மம்முட்டியின் மனைவியாக நடித்திருந்தார் சீமா சிந்து கிருஷ்ணன். இவர் அடிப்படையில் கேரள பல்கலைக்கழகத்தில் ஒரு துறையில் உதவி செக்சன் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவற்றில் இவர் பேசிய திருவனந்தபுர பேச்சுவழக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால் களம் காவல் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் மம்முட்டியின் மனைவி கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தாராம்.
Add a Comment
