நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனிடையே, ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜப்பான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சைத்ரா ஆச்சர் நடித்துள்ளார்.மேலும் குரு சோகசுந்தரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் கடைசிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. நடித்துள்ளார். ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘மை லார்ட்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
