நம்முடைய வாழ்க்கைமுறை மேற்கத்திய கலாச்சாரம் அல்ல – நடிகை ஜான்வி கபூர் OPEN TALK!

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தற்போது நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்த சூழலில், பெற்றோரை கவனிப்பது குறித்து அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் பேசியபோது, “இந்திய கலாசாரத்தில் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வது பிள்ளைகளின் கடமை. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு, அவர்கள் நம்முடைய குழந்தைகளாகவே மாறிவிடுகிறார்கள். அதனால் அன்பை பகிர வேண்டும்.

நம்முடைய வாழ்க்கை முறை மேற்கத்திய கலாச்சாரம் போல இல்லை. பெற்றோரை விட்டுவிட்டு விலகிச் செல்வதற்காக அல்ல. சிறுவயதிலிருந்தே பொறுப்புகளை நாம் கற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறோம், இல்லையா என்று கூறினார். ஜான்வி கபூரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading