மிகப்பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்படுகிறதா ‘மரகத நாணயம் 2’ ? வெளியான புது அப்டேட்!

2017ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக ‘மரகத நாணயம்’ அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் தொடர்ச்சியாக ‘மரகத நாணயம் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்தப் புதிய படத்தில் நடிகர் ஆதி மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் சத்யராஜ், நடிகை நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.ஆர்கே. சரவண் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பி.வி. சங்கர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசுகையில், “மரகத நாணயம் 2-ஐ தயாரிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால் இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்த முறை உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில், பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல திறமையான நடிகர்களுடன் இணைந்து, முழுமையான அல்டிமேட் என்டர்டெய்னராக இந்த படம் தயாராகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading