மீண்டும் ஷாருக்கான் உடன் கைகோர்க்கிறாரா இயக்குனர் அட்லீ?

அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தொடர்ந்து சில தோல்விப் படங்களை சந்தித்து வந்த ஷாருக்கானுக்கு இந்த படம் மீண்டும் வெற்றிப் பாதையை ஏற்படுத்தி கொடுத்தது. அதுமட்டுமின்றி, முதன்முறையாக தேசிய விருதையும் இந்த படம் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக அட்லி மீது ஷாருக்கானுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்கள் வட்டாரத்தினருக்கும் தனிப்பட்ட மரியாதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் அட்லி, அடுத்ததாக மீண்டும் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படம் ‘டான் 3’ ஆக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அமிதாப் பச்சான் நடித்த ‘டான்’ திரைப்படம் 1978ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ உருவானது. பின்னர் 2006ஆம் ஆண்டு இந்தியில் ‘டான் 2’ திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்தார். அதேபோல், தமிழில் அஜித் நடிப்பில் ‘பில்லா’ மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது ‘டான் 3’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஷாருக்கான் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த படத்தை தனது விருப்பமான இயக்குநரான அட்லி தான் இயக்க வேண்டும் என்ற ஆசையை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அமிதாப் பச்சான் நடித்த ‘டான்’ திரைப்படத்தை சந்திரபரோட் இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அஜித் நடிப்பில் உருவான ‘பில்லா’ ரீமேக் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். ஷாருக்கான் நடித்த ‘டான் 2’ திரைப்படத்தை பர்ஹான் அக்தர் இயக்கியிருந்தார். அதேபோல், அஜித்தின் ‘பில்லா 2’ திரைப்படத்தை சக்ரி இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading